பகட்டு (பெயர்ச்சொல்)
அலங்கார நோக்கம் அதிகம் இருக்கும் செயல்
மற்போர் (பெயர்ச்சொல்)
முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி எதிராளியை விழச்செய்யும் விளையாட்டு
பாதணி (பெயர்ச்சொல்)
தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.
மேன்மை (பெயர்ச்சொல்)
வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
வேட்கை (பெயர்ச்சொல்)
தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
பிராது (பெயர்ச்சொல்)
பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
பிடிவாதம் (பெயர்ச்சொல்)
தன் பிடியில் தீர்மானமாய் இருப்பது
விதவிதமான (பெயரடை)
ஒன்றுக்கு மேற்பட்ட
தொடக்கம் (பெயர்ச்சொல்)
ஒரு செயலின் அடிப்படை நிலை
இரக்கம் (பெயர்ச்சொல்)
பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் நிலை